யோகி ராம்சுரத்குமார் ஆசிரம கும்பாபிஷேக நிறைவு விழா!
திருக்கோவிலுார்: திருவண்ணாமலையில் உள்ள, பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தின், மகா கும்பாபிஷேக 11ம் ஆண்டு நிறைவு விழா ÷ நற்று துவங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 6:30 மணிக்கு, மூலமந்திர ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடந்தது. பின், கடம் புறப்பாடாகி, அதிஷ்டானத்தில் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து, யோகி ராம்சுரத்குமார் மகராஜ் சுவாமிகளுடன் ஏற்பட்ட அனுபவங்களை, பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர். மாலை 4:30 மணிக்கு, மயிலை சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், 6:15 மணிக்கு, சட்டநாத பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான இன்று(௨௬ம் தேதி) காலை, அதிஷ்டானத்தில் மூலவ ருக்கு மகா அபிஷேகமும், அலங்காரம், சோடசோப உபச்சார தீபாராதனையும் நடக்கிறது. மாலையில், புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஜஸ்டிஸ் அருணாச்சலம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.