சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா!
ADDED :3808 days ago
காங்கயம்: சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது. காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவி லில், கடந்தாண்டு ஜூலை 4ல், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டு நிறைவு விழாவையொட்டி, 108 மூலி கைகளை கொண்டு, யாக பூஜை, மகா வேள்வி, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு, கலச பூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானை சமேதரராய் சுப்ரமணியர் எழுந்தருளினார்; மலை மீது சுவாமி வீதி உலா நடந்தது; நுõற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.