உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேக விழா!

சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேக விழா!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, மேட்டுப்பட்டியில்  அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வருகிற 1.7.2015 அன்று  வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்றைய தினம் காலை 8 மணியளவில் யாகபூஜை, சுதர்ஸன ஹோமம், பஞ்ச சூத்த ஹோமம், 1008 சகஸ்ரநாம ஹோமம் நடைபெறுகிறது. காலை 10. மணி முதல் 12 மணிக்குள் 500 லிட்டர் பால் அபிஷேகம், மகாபிஷேகம், சப்தவர்ண அபிஷேகம், ஏழுவர்ண அபிஷேகம் 16 வகை அபிஷேகம் நடைபெறும். அன்றைய தினம் வஜ்ர அங்கி சேவை அலங்காரத்தில் அருள்பாலிப்பார். மறுதினம் 2.7.2015 வியாழன் அன்று ஸ்ரீபங்காரு அம்மன் வருஷாபிஷேக விழா நடைபெறும். பக்தர்கள் ஹோமத்திற்கான தேங்காய், நெய் மற்றும்  அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை கோயிலில்  சமர்ப்பிக்கலாம்.

தொடர்புக்கு:  மீனாட்சி கனகராஜ் அறக்கட்டளை, வி.ஆர். சுந்தர்ராஜபட்டாச்சாரியார், மொபைல்: 94432 26861.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !