உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் உண்டியலுக்கு சீல்!

முத்துமாரியம்மன் கோவில் உண்டியலுக்கு சீல்!

குரோம்பேட்டை: குரோம்பேட்டை, பாரதிபுரம் முத்து மாரியம்மன் கோவில் உண்டியலுக்கு, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், நேற்று சீல் வைத்தனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: குரோம்பேட்டை, பாரதிபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் நிர்வாகம் குறித்து, இந்து சமய அறநிலைய துறைக்கு புகார் வந்தது. அதையடுத்து, மேற்கு தாம்பரம், செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோவில் செயல் அலுவலர், அந்த கோவிலின் தக்காராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு, நவம்பர், 24ம் தேதி, அவர் பொறுப்பேற்க சென்றார். அப்போது, கோவில் நிர்வாகிகள், அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கவில்லை. அதனால், தக்கார் தாமாகவே பொறுப்பேற்று கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் நிர்வாகிகள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட், கோவிலில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என, உத்தரவிட்டது. இதற்கிடையில், கோவில் நிர்வாகத்தினர் உண்டிலை உடைத்து, அதில் இருந்த பணத்தை எடுத்தனர். இந்து சமய அறநிலைய துறை கோர்ட்டுக்கு சென்றதை அடுத்து, அந்த பணத்தை அறநிலைய துறை வங்கி கணக்கில் வைக்க வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டது. அதையடுத்து, உண்டியலுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !