உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய ரூ. 44 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் செலுத்திய ரூ. 44 லட்சம்

நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், ரூ.44 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். நாமக்கல்லில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உண்டியல்கள் மூன்று மாத இடைவெளியில் பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவிலில் உள்ள, ஆறு உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலிருந்த பணம், நகை போன்றவை எண்ணப்பட்டன. இந்தப் பணியில் இந்து சமய அறநிலையத் துறையின், திருச்செங்கோடு உதவி ஆணையர் சூரிய நாராயணராவ், கோவில் உதவி ஆணையர் சபர்மதி தலைமையில் பாவை மற்றும் செல்வம் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் கோவில், வங்கி பணியாளர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் மொத்தம் ரூ. 44 லட்சத்து 9,397ரூபாய், 97 கிராம் தங்கம், 147 கிராம் வெள்ளியும் இருந்தது. இதை பல்வேறு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் பணம் எண்ணும்போது கோயில் செயல் அலுவலர் மற்றும் தக்கர் எஸ்.கிருஷ்ணன் மற்றும் வங்கி அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !