உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாதப் பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை!

ரங்கநாதப் பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை!

ஆனைமலை: ஆனைமலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில், ஆனி மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது.  ஆனைமலை பெரியகடை வீதியில், 200 ஆண்டுகள் பழமையான  ரங்கநாத பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, வளர்பிறை ஏகாதசி அன்று  சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்றுமுன்தினம் ஆனைமலையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதப் பெருமாளுக்கு நடந்த வளர்பிறை  ஏகாதசி சிறப்பு பூஜையில், பெருமாளுக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிேஷகங்கள் செய்யப்பட்டன. மே லும் சம்பங்கி,மல்லிகை, துளசி, செம்பருத்தி உள்ளிட்ட 9 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.  ஆபரணம் அலங்காரத்தில்  இறைவன்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவிலின்  பரம்பரை அறங்காவலர் ராமகிருஷ்ணன், நிர்வாக பொறுப்பாளர் ராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !