வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :3839 days ago
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.வால்பாறை நகர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. கோவிலின் ஒரு பகுதியில் உள்ள துர்க்கை அம்மனுக்கு, செவ்வாய்க்கிழமையில் சிறப்பு பூஜை நடத்தப்படும். சிறப்புஅபிேஷகமும், அலங்காரப் பூஜையும் நடந்தது. பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.