உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முறையூர் மீனாட்சிஅம்மன் கோயில் ஆனி தேரோட்டம்

முறையூர் மீனாட்சிஅம்மன் கோயில் ஆனி தேரோட்டம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி செக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. ஜூன் 22 ல் காப்புகட்டுடன் விழா துவங்கியது. தினமும் உபயதார் மண்டகப்படி சார்பில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. குமார்,சுரேஷ் குருக்கள் தலைமையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு, பகல் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், நாதஸ்வர கச்சேரி, நடன நாட்டியம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று தேவஸ்தான கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் முன்னிலையில் தேரடி பூஜை நடந்தது. பக்தர்கள் தேர் வடத்தை பிடித்து இழுத்தனர். பிரியாவிடையுடன் சொக்கநாதர், மீனாட்சி அம்மன் தனி தேர்களில் உலா வந்தனர். கிராம சாமியாடி சொக்கநாதன், கரு.கோபாலன், சி.சத்தியமூர்த்தி, தனலெட்சுமி வேணுகோபால், பொன்பாஸ்கரன், பெரி.சுப்பையா, பெரி.சதாசிவம், சே.செல்லையா, வீர.பழனி, செ.ரவிச்சந்திரன், சுப.மணிவண்ணன், மரு.ஆத்மநாதன், சொ.திருவாசகம் பங்கேற்றனர். இன்று சுவாமி மஞ்சள் நீராடுதல், பூத்தட்டுஎடுத்தல்,இரவு சுவாமி திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !