ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் தேரோட்டம்!
ADDED :3879 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை தேரோட்டம் நடந்தது. காலை 10.35 சுவாமியின் பெரியதேர், நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மன் வீற்றிருந்த சிறியதேர் வந்தது. நமச்சிவாய கோஷத்துடன் ஆண்பக்தர்கள் பெரியதேர், பெண்பக்தர்கள் சிறியதேரை இழுத்தனர். கோயிலை சுற்றிய பின், 11.30 மணிக்கு தேர் நிலையத்தை வந்தடைந்தது. கோயில் நிர்வாக அதிகாரி அறிவழகன், சரவண பட்டர், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். சங்கரேஸ்வரன் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.