சிவ விரத பலன்கள்!
ADDED :3785 days ago
கன்னிகா தானமோர் அயுதநியு தம்வாசி
கபிலையொரு கோடி தானம்
கமலைஇறை யானஅரி பிறிதுருவம் ஒருசதம்
கனககிரி ஒருகோ டிநேர்
சொன்னமணி தானமகம் ஆயிரம் இலக்கம்
தொகுத்தஏ காத சிபலன்
துகளில்சிவ பூசையனு தினமாற்ற வுறுபயன்
சோமவா ரமொடு ஆதிரை
பன்னுசிவ நிசிமுதல் பகர்நமது விரதமறை
பகர்வழியின் ஆற்றி னோர்க்குப்
பாலிக்கும் எனஅம்பி கைக்குநீ முன்னம்
பகர்ந்திடுப யன்கள் இவைதாம்
சின்னமுர செக்காளம் வளைதாள முதலிய
திரைகடல் அடங்க ஆர்க்கும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.