நடராசப் பெருமானுக்குரிய அபிடேக தினங்கள்!
ADDED :3785 days ago
உம்பருக்கு ஒருவருடம் ஒருதினம தாதலின்
உரைத்தசட் கால பூசைக்கு
உறுபொழுது அமைத்துமார் கழியாதி ரைத்தினம்
உஷக்கால பூசனை கொள்வாய்
கும்பமதி தனில்வளர் பிறைச்சதுர்த் தசிதனில்
குளிர்கால சந்தி பூசை
குலவுசித் திரையோண மத்தியா னச்சபரி
கொள்வை யானிஉத் தாமதில்
எம்பரம நிற்குரிய சாயான்ன பூசனை
இரண்டுறுங் கால பூசை
எழிலரிச் சுக்கில சதுர்த்தசி சொலத்திதி
இருங்கன்னி அர்த்த சாமம்
செம்பவள வல்லியுடன் எந்தைநீ யாடியருள்
திருமஞ்ச னங்கொள் தினமாம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.