மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!
ADDED :3824 days ago
செஞ்சி: செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழாவை முன்னிட்டு, கடந்த 29ம் தேதி மாலை செஞ்சி கோட்டை செல்லியம்மன், பூவாத்தம்மனுக்கு பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்தனர். அன்று இரவு செல்லியம்மன், பூவாத்தமன், மாரியம்மனுக்கு பூங்கரக ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை பூங்கரக ஊர்வலமும், மதியம் 2:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தலும், மாலை மாரியம்மனுக்கு கும்ப படையலும் நடந்தது. இரவு பூங்கரகத்துடன் சாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை மஞ்சள் நீராட்டும், மாலை அம்மன் பூங்கரகம் விடைபெறுதலும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.