உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தானந்த சுவாமி கோவிலில் 5ம் தேதி குரு பெயர்ச்சி விழா

சித்தானந்த சுவாமி கோவிலில் 5ம் தேதி குரு பெயர்ச்சி விழா

புதுச்சேரி : கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில், வரும் 5ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.குருபெயர்ச்சியான 5ம் தேதி, இரவு 11.02 மணிக்கு, கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். அதையொட்டி, கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அன்றிரவு 7;00 மணிக்கு கலச பிரதிஷ்டை, 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், 10:30 மணிக்கு குருவுக்கு மகா அபிஷேகம், 11:02 மகா தீபாராதனை நடக்கிறது.மகா அபிஷேகத்திற்கு பொருட்கள் கொடுக்க விரும்பும் பக்தர்கள், அன்றிரவு 7:00 மணிக்குள் கோவிலில் தரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !