உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருணா சாயிபாபா கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம்!

கருணா சாயிபாபா கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம்!

செஞ்சி: செஞ்சி காரியமங்கலம், கருணா சாயிபாபா கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. செஞ்சி காரியமங்கலம்  கருணா சாயிபாபா கோவிலில், நேற்று குருபெயர்ச்சி யாகம், மதுரை வீரனுக்கு 48வது நாள் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதில் கருணா  சாயிபாபா, ராஜ ராஜேஸ்வரி, ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு விசேஷ திரவிய  ஹோமம் நடந்தது.  தொடர்ந்து யாகசாலை நீரை கொண்டு கருணாசாயி பாபா, ராஜராஜேஸ்வரி, ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்  மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !