உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

பழநி கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

பழநி: குருபெயர்ச்சியை முன்னிட்டு பழநிகோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. நேற்று இரவு 11 மணிக்குமேல் குருபகவான் கடகராசியில் இருந்து சிம்மராசிக்கு இடம்பெயர்வதை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயில் தெற்கு உட்பிரகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மாலை சந்தனகாப்பு அலங்காரத்திலும், இரவு 11 மணிக்குமேல் வெள்ளிக்கவசத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதேபோல பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, வில்வம், கொண்டைக் கடலை மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. பெரியநாயகியம்மன் கோயில் உட்பட மற்ற கோயில்களில் தோஷ நிவர்த்திக்காக நவக்கிரக சன்னதியிலுள்ள வியாழ பகவானுக்கு மஞ்சள்பட்டு சாத்தி, நெய்தீபம் ஏற்றி பரிகார பூஜை செய்து பக்தர்கள் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !