எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவிலில் மகா ஹோமம்
ADDED :3745 days ago
குன்னுார்: எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவி லில், உலக நன்மைக்காக, ஸஹஸ்ர சண்டி மகா யக்ஞம் நடந்து வருகிறது.குன்னுார் அருகே எடப்பள்ளி கிராமத்தில் ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கமாக உருவாகியுள்ள, ஆத்மலிங்கத்திற்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலக நன்மைக்காக, ஸஹஸ்ர சண்டி மகா யக்ஞம் துவங்கியது. தினமும், காலை, 7:00 மணி முதல் தேவி மகாத்மிய பாராயணம், அர்ச்சனை, தீபாராதனை, மாலை, 6:00 மணி முதல், 8:00 மணி வரை சிறப்பு சண்டி மகா ஹோமம் ஆகியவை நடந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை சித்தகிரி ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை தலைவர் சக்திமயி, செயலாளர் நந்துபாபா மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.