உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவசாய நிலத்தில் சுவாமி கற்சிலை கண்டெடுப்பு!

விவசாய நிலத்தில் சுவாமி கற்சிலை கண்டெடுப்பு!

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி கிராமத்தில் விவசாய நிலத்தில் இரண்டரை அடி உயரமுள்ள பழமையான பெருமாள்  கற்சிலை கிடைத்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவி கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பேசும் பெருமாள் கோவில் உள்ளது.  இந்த கோவிலுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை இப்பகுதி மக்கள் குத்தகை அடிப்படையில் பயிர் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வமணி, 50; என்பவர், தான் பயிர் செய்து வரும் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான  நிலத்தில் ஏர் உழுத போது கலப்பையில் ஏதோ பொருள் தட்டுப்பட்டது. உடனடியாக அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது இரண்டரை அடி உய ரமுள்ள பெருமாள் கற்சிலை இருப்பது தெரிய வந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் நேரில் வந்து சிலையைப் பார்த்து  வழிபடத் துவங்கினர். இந்த நிலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்  உரல், அம்மி உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சேத்தியாத்தோப்பு  டி.எஸ்.பி., குத்தாலிங்கம், சோழத்தரம் சப் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி உள்ளிட்ட போலீசார்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சிலையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !