உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொல்லாப் பிள்ளையார் கோவிலில் குரு பெயர்ச்சி மகா யாகம்!

பொல்லாப் பிள்ளையார் கோவிலில் குரு பெயர்ச்சி மகா யாகம்!

சிதம்பரம்: குரு பெயர்ச்சியையொட்டி திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் கோவிலில் நடந்த மகா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குரு பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு நேற்று முன்தினம் இரவு 11.03க்கு இடப்பெயர்ச்சி செய்தார். சங்கட ஹர சதுர்த்தி தினமான நேற்று  முன்தினம் குரு பெயர்ச்சி நடைபெறுவது சிறப்பு என்பதால் திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் கோவிலில் குரு பெயர்ச்சி மகா யாகம் நடந்தது. கோவில் நிர்வாகம், அன்னதான டிரஸ்ட் மற்றும் வைபவஸ்ரீ ஜாதகாலயா சார்பில் சிதம்பரம் வெங்கடேச தீட்சிதர் தலைமையில் நடராஜர் கோவில்  தீட்சிதர்கள் மகா யாகம் மற்றும் பூஜை செய்தனர். யாகத்தில் தஞ்சை, அரியலுõர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு  தீபாராதனைகள் நடந்தது. இதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அர்ச்சனை செய்து குரு பகவானை வழிபட்டனர். இதேப்போன்று சிதம்பரம்  நடராஜர் கோவில் மற்றும் அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி சுவாமிக்கு குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !