ராவுத்தநல்லூரில் குரு பெயர்ச்சி விழா!
ADDED :3746 days ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி நடந்தது. மூங்கில்துறைப்பட்டு, கடுவனுõர், புதுப்பட்டு, ராவத்தநல்லூர் ஆகிய கிரா மங்களில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. நிகழ்ச்சியில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு செய்தனர். ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.