உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பகுதியில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்!

கள்ளக்குறிச்சி பகுதியில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது. குரு பெயர்ச்சியையொட்டி  கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று காலை பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு குரு கலச  ஆவாஹனம், சிறப்பு பூஜைகள், யாகம் நடத்தினர். தட்சணாமூர்த்திக்கும், நவகிரகங்களில் உள்ள குருபகவானுக்கும் இரவு 10:00 மணிக்கு கலசாபி ஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரங்களுக்கு பின் பரிகார ராசிக்காரர்களுக்குரிய பூஜைகள், தோஷ நிவர்த்தி செய்து இரவு குரு பெயர்ச்சியாகும்  11:01 மணிக்கு, குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !