உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!

பாலமுருகன் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!

புதுச்சத்திரம்: குரு பெயர்ச்சியையொட்டி, பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. குரு பகவான் கடக ராசிலிருந்து சிம்ம ராசிக்கு நேற்று முன்தினம் இரவு 11.02 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதனையொட்டி புதுச்சத்திரம் அடுத்த  பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பரிகார ஹோமம் நடந்தது. அதனைö யாட்டி இரவு 9.00 மணிக்கு குரு பரிகார ஹோமம், 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு இரவு  11.02 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பரிகார ராசிக்காரர்கள் நெய் தீபம் மற்றும் கொண்டை கடலை மாலை அணிவித்து பரிகாரம்  செய்தனர். இதில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம  பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !