உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம்!

பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம்!

திருவெண்ணெய்நல்லுõர்: பையூர்  தட்சணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமங்கள் நடந்தது. திருவெண்ணெய்நல்லுõர் அடுத்த  பையூரில் ஞானகுரு தட்சணாமூர்த்தி கோவிலில், 12 அடி உயர குரு பகவான் சிலை அமைந்துள்ளது. இக்கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு  நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு விநாயகர் பூஜையும், 7:30 மணிக்கு கலசபூஜை, சங்கு பூஜை மற்றும் குரு பரிகார ஹோமங்கள் நடந்தது. இரவு 8:15 மணிக்கு பால், சங்கு, கலச அபிஷேகமும், இரவு 10:00 மணிக்கு குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 11:02  மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, வழிப்பட்டனர். ஏற்பாடுகளை ஞானகுரு தட்சணாமூர்த்தி குருபீட  நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !