கோவில் முன் வாகனங்கள் நிறுத்தம்: பக்தர்கள் கடும் அவதி!
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் முன் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால் பக்தர்கள் கடும் அவதியடைகின்றனர். விரு த்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகம், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட உற்சவங்கள், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, கிரு த்திகை போன்ற மாதாந்திர உற்சவங்களும் விசேஷமாக நடக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கோவில் வாசல் முன், தாறுமாறாக நிறுத்துவதால் பக்தர்கள், பாதசாரிகள் கடும் அவதியடைந்தனர். இதனைச் சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, கோவில் எதிரே நந்தவனத்தில் வாகன நிறுத்தம் அமைத்து, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த மாசிமக உற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட கலெக்டர் சுரேஷ்குமார், அப்போதைய எஸ்.பி., ராதிகா வாகன நிறுத்தத்திற்கு தனியாக பாதை அமைத்து, கோவில் முன் மண்டபத்தில் புறக்காவல் நிலையம் திறந்து வைத்தனர். ஆனால், ÷ காவில் முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது தொடர் கதையாகவே உள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் சென்றுவர சிரமம் அடைகின்றனர். எனவே, விருத்தகிரீஸ்வரர் கோவில் முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.