ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம்
ADDED :27 minutes ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கார்த்திகை உற்ஸவம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று இரவு கோயிலில் இருந்து எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் பெரிய பெருமாள் மாடவீதி சுற்றி வந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் பெரிய பெருமாள் சன்னதி எதிரிலும், அரங்கநாத பெருமாள் சன்னதி தெருவிலும் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.