உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை!

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. குருபகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு நேற்று  முன்தினம் இரவு 11.05 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வடக்கு நோக்கி அமைந்துள்ள  குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரம் செய்து மகாதீபாராதனையுடன் பரிகார அர்ச்சனைகள் நடந்தது. சுற்று  வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு தீபம் ஏற்றி குருபகவானை வழிபட்டனர். நாகராஜ், சோமு கு ருக்கள் பூஜைகளை செய்தனர். ஸ்ரீகந்தவிலாஸ் ஜெயக்குமார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !