பெண்கள் ஒப்பாரி வைத்து மழை வேண்டி சிறப்பு பூஜை!
ADDED :3747 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த, கண்ணமங்கலம், 5 புத்தூர் கிராமத்தில் உள்ள புது ஏரியில், சின்னபுத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மழைவேண்டி நேற்றுமுன்தினம், சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக, மாரியம்மன் கோவிலில் இருந்து, மேளதாளத்துடன், பஞ்சாயத்து தலைவர் வரதன் தலைமையில், ஊர்வலமாக ஏரிக்கு சென்றனர். பின்னர், ஏரியில் பெண்கள் ஒப்பாரி வைத்து, அம்மனுக்கு படையலிட்டு, மழை வேண்டி வழிபட்டனர். அப்போது, பக்தர்கள் சிலர் அருள்வந்து ஆடினர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், 5 புத்தூர், சின்னபுத்தார் வாழியூர், வண்ணாங்குளம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.