உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களநாதர் கோயிலில் நீராளி பத்தி மண்டபம் மராமத்து பணிகள் நிறைவு

மங்களநாதர் கோயிலில் நீராளி பத்தி மண்டபம் மராமத்து பணிகள் நிறைவு

கீழக்கரை: உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் கருவறைக்கு பின்புறம் நீராளி பக்தி மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் 13 ம் நிதி ஆணையத்தின் மூலம் ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் கடந்த 2012 ல் துவங்கப்பட்ட கற்கள் செதுக்கும் பணி, பிரகார தூண்கள், மேல்தளம் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றுள்ளது. ஆனால், கோயிலின் முதல் பிரகாரத்தின் பின்பக்க பணிகள் 1983 க்கு பிறகு நடைபெறாததால், முழுமை அடையாமல் உள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் பக்தர் மங்களேஸ்வரன் கூறுகையில், ""பாதியில் விடுபட்டுள்ள முதல் பிரகாரத்தின் பணிகளுக்கு இந்துசமய அறநிலையத்துறை நிதி ஓதுக்கீடு செய்தால், கட்டடக்கலையின் ஆகம விதிப்படி முழுமையான பிரகார சுற்றுக்கள் கட்டி முடிக்கப்படும் என்பதே இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எதிர்பார்ப்பு, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !