உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டையில் குருபெயர்ச்சி ஹோமம்

தேவகோட்டையில் குருபெயர்ச்சி ஹோமம்

தேவகோட்டை: குருபெயர்ச்சியை முன்னிட்டு தேவகோட்டையில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் இரண்டு கால ஹோமம் நடந்து, குருபகவானுக்கும்,மேதா தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குரு, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவுசேரி மும்முடிநாதர் கோயிலில் சிறப்பு ஹோமத்திற்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. கைலாசநார் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆதி சங்கரர் கோயிலில் தட்சிணாமூர்த்தி அவதாரமாக விளங்கும் ஆதி சங்கரருக்கும், குருபகவானுக்கும் சிறப்பு ஹோமம் செய்து அபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அனைத்துக் கோயில்களிலும் நூற்றுக்கணக்கானோர், தங்கள் ராசிகளுக்கு பரிகாரமாக சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !