உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாட்டு சொல்லும் தேதி!

பாட்டு சொல்லும் தேதி!

மார்கழி மாதம் முழுவதும் பெருமாள் கோவில்களில் ஆண்டாளின் திருப்பாவை பாடப்படும். முதல் நாளில் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்னும் பாசுரத்தில் தொடங்கி,  தினமும் ஒரு பாட்டு வீதம் பாடுவர். இதற்கு நாள் பாட்டு என்று பெயர். இதன் காரணமாக, அந்த காலத்தில் மார்கழியில் எழுதப்படும் கடிதங்களில் தேதி குறிப்பிடாமல், அந்தந்த நாளுக்குஉரிய பாசுரத்தின் முதல் வார்த்தையை எழுதும் மரபு இருந்தது. உதாரணமாக மாயனை என்று எழுதினால் மார்கழி ஐந்தாம் தேதி, வங்கக்கடல் என்றால் 30ம்தேதி என்று பொருள் கொள்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !