உங்களில் ஒருவன்!
ADDED :3911 days ago
உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமலும், எதிர்பார்ப்பு இல்லாமலும் கடவுள் நமக்காக இறங்கி வரும் குணத்தை சவுசீல்யம் என்பர். தனது மேம்பட்ட அதிகார நிலையில் இருந்து அவர் இறங்கி வருகிறார். திருமால், ராமனாக அவதாரம் எடுத்து, மனிதர்களோடு மட்டுமில்லாமல், வேடர், குரங்கு, பறவை என எல்லா உயிர்களுடனும் நெருங்கிப் பழகினார். பக்தர்கள் ஏவிய பணியைக் கூட செய்தார். கண்ணனாக வந்த போது, துவாரகையின் மன்னராக இருந்தாலும், பாண்டவர் களுக்காக துõது சென்றார். குருக்ஷேத்திர யுத்த பூமியில் அர்ஜூனனின் தேர் சாரதியாக கூட செயல்பட்டார். ஆயர்பாடி சிறுவர்கள் கண்ணனின் லீலைகளைக் கண்டு பயந்து விலகிய போது, என்னைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்களில் ஒருவனே நானும்! என்று சொல்லி பழகினார். கடவுளின் கருணையை என்னவென்பது!