உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

விக்கிரவாண்டி சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த எஸ்.குச்சிபாளையம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் பாப்பனப் பட்டு மதுரா எஸ்.குச்சிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி  கடந்த 5ம் தேதி மாலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9: 30 மணி மூன்றாம் கால யாகபூஜை  முடிந்து, சந்திர சேகர குருக்கள் தலைமையில்  கடம் புறப்பாடு நடந்தது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், ÷ காவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றினார். விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி பெரியசாமி, துணைத்தலைவர் சுலோச்சனா  சேகர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !