ஆதிரெத்தினேஸ்வர் கோயில் குளத்தை தூர் வார கோரிக்கை
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தை தூர் வாரி, சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன் உள்ள தெப்பக்குளம் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. நாளடைவில் இப்பகுதியில் வசிப்போர் குளத்தை, குளிப்பதற்கு பயன்படுத்தி கொண்டனர். தற்போது இக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் தூர்ந்து போய் விட்டது. குளத்தின் சுற்றுச்சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கரையை சுற்றிலும் குப்பைகள் கொட்டுவதால் சுகாதாரமற்ற நிலை உள்ளது. மேலும், காட்டு கருவேல செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் குளத்து நீரில் மாசு படிந்துள்ளது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் இக்குளத்தை பார்த்து முகம் சுளிக்கின்றனர். அவர்களின் நலன்கருதி குளத்தை மராமத்து செய்து, கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.