உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகும்பேசுவர ஸ்வாமி கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம்

ஆதிகும்பேசுவர ஸ்வாமி கோவிலில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம்

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவர ஸ்வாமி கோவிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பரிகார ஹோமம் நடைபெற்றது. இக்கோவிலில், மங்களாம்பிகை உடனாய ஆதி கும்பேசுவர ஸ்வாமி மூலவராக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆதிகும்பேசுவரருக்கு தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு, குரு பகவான் இடப்பெயர்ச்சியடைந்து சிம்ம ராசியில் பிரவேசம் செய்தார். அதை முன்னிட்டு, இக்கோயிலில் நவகிரக சன்னதியில் அமைந்துள்ள குரு பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !