உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்திக்காக வித்தியாசமான சிலைகள்!

விநாயகர் சதுர்த்திக்காக வித்தியாசமான சிலைகள்!

கும்மிடிப்பூண்டி: ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் கூடாரம் அமைத்து, விநாயகர் சதுர்த்திக்காக, வித்தியாசமான சிலைகளை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி, ஜி.என்.டி., சாலையோரம், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட இரு குடும்பத்தினர், ஏழு மாதங்களுக்கு முன், சிலை தயாரிக்கும் வேலைக்காக கூடாரம் அமைத்தனர். அலங்கார சிலைகளை மட்டுமே தயாரித்த வந்த அவர்கள், செப்டம்பர் மாதம் 17ம் தேதி வர இருக்கின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இரு மாதங்களுக்கு முன், வித்தியாசமான சிலை தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தேங்காய் நார், பிளாஸ்டோ பாரிஸ் மூலம் இரண்டரை அடி முதல், ஒன்பது அடி உயரம் வரை அச்சு எடுக்கப்பட்ட சிலைகள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, ராதா, கிருஷ்ணனுடன் விநாயகர் வீற்றிருக்கும் எட்டு அடி உயர சிலை, காண்பவர்களை வெகுவாக கவர்கிறது. இதுகுறித்து, அங்கு சிலை தயாரிப்பவர் கூறுகையில், முதல் கட்டமாக, ராதா, கிருஷ்ணனுடன், விநாயகர் சிலை தயாரித்துள்ளோம். அடுத்தடுத்து, மேலும் வித்தியாசமான சிலைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !