பச்சைமரத்து மாரியம்மன் தீச்சட்டி திருவிழா!
ADDED :3748 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் நாயுடுபுரம், சண்முகபுரத்தில் அமைந்துள்ள பச்சைமரத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. நேற்று ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு தீச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 23 ந்தேதி கொடியேற்றம் நடந்தது. 6 ந்தேதி அம்மன் பவனியும், 7 ந்தேதி மாவிளக்கு, சக்திகரகமும், 8ந்தேதி தீச்சட்டி மற்றும் முளைப்பாரி ஊர்வலமும், ஜூலை 14 ந்தேதியன்று அம்மனுக்கு மறுபூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெறும்.