உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெவ்வப்பா பண்டிகை கோலாகல துவக்கம்!

தெவ்வப்பா பண்டிகை கோலாகல துவக்கம்!

மஞ்சூர்: மஞ்சூர் அருகே, குந்தை சீமெ மக்களின், தெவ்வப்பா திருவிழா சிறப்பு பூஜையுடன் துவங்கியது. இதை தொடர்ந்து, நாளை மாலை கீழ்குந்தா கிராமத்தில் உள்ள காடெஹெத்தை கோவில் மற்றும் சிவன் கோவிலில் மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, இரவு முழுவதும் ஆடல், பாடலுடன் படுகரின மக்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11ம் தேதி காலை, 10:30 மணிக்கு ஹெத்தையம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி மற்றும் சிவன் கோவிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மதியம், 2:30 மணிக்கு விழாவில் சிறப்பு நிகழ்ச்சியான அரிகட்டுதல் (புதிய அறுவடை செய்த பயிர்களை சுவாமிக்கு படைக்கும் நிகழ்ச்சி) நடக்கிறது. பின்பு, பாரம்பரிய பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கு, போஜாகவுடர் தலைமை வகிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !