ஆசாரியாவின் இலக்கணம்!
ADDED :4036 days ago
எண்ணிய சைவா கமத்துட்கி ரந்தமொர்
இலக்க மாய்ந்தவ னுத்தமன்
ஏருறும் அதிற்பாதி கற்றறிந் துறைவிதி
இயம்புதே சிகன் மத்திமன்
தண்ணளியொ டிருபதா யிரநற் கிரந்தந்
தன்னக்கற்று ளோன தமனாம்
சாற்றுமயு தம்கிரந் தங்களா யினுமோது
தகுதியோன் அதமா அதமன்
நண்ணுமதி நுட்படவு ணர்ந்துசிவ பூசைசெய
நண்ணினோன் தேவ லகனாம்
நவிலுநூல் விதிகள்கற் றுணர்வொன்றி லாதவஞ்
ஞானிதெய் வத்து ரோகி
திண்ணமவ னைக்கண்ட வுடனேகு வோமென்று
சிவமறைகள் பலவு ரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.