குற்றங்கள் நீங்கும் நெறிகள்!
ADDED :3777 days ago
கருதரிய பிரதோட காலத்தின் மஞ்சனக்
கமலநின் முடியி னாட்டில்
கனகுற்றம் ஒருபது பொறுத்தருள்வை பால்சதம்
கருதாயி ரம்த யிர்க்குக்
கிருதமொரு பதினாயி ரங்குற்ற நற்சுவை
கிளைத்தெழு கரும்பி லக்கம்
கிளர்பத்தி லக்கமது கோடிதெங் கிளநீர்
கிடைத்தசந் தனக்கு ழம்பிற்
பெருகவுனை யாட்டிடின் அனந்தம் அள வில்லாப்
பெரும்பிழைபொ றுத்தருள் வையப்
பெற்றியது போலுனது சதகமதில் எப்பிழை
பிறந்திடினும் நீபொ றுத்துத்.
திருவருள் சுரந்தெளிய நாயினும் கடையனென்
சிறுதமிழ்க்கு உகந்த ருளுவாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.