மேன்மையின் வகைகள்!
ADDED :3746 days ago
கருதரிய செல்வமது பெறுவதே மேன்னமஉயர்
கல்வியது தனினு மேன்மை
கற்பதினு மேன்மையது வாம்இனிய மூதறிவு
காசினியெ லாம திக்கும்
பெருகியவு தாரசற் குணமுடைய ததின்மேன்மை
பிழையிலில் லறந டாத்திப்
பிதிர்தெய்வ முடன்விருந் தொக்கல்மன மகிழவே
பெறுதலது தனினு மேன்மை
அரியபல வுயிரெலாம் தன்னுயிர்க்(கு) ஒப்பஅன்பு
அடைதலது தனினு மேன்மை
அறையுமிவை யாவுமொரு வர்க்குள்ள தாயிலுன்
அருட்செல்வர் அவரா தலால்
திரிநயன பரசுகுண கருணாக டாட்சநின்
திருவருள்எ னக்குத வுவாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.