/
கோயில்கள் செய்திகள் / சதகப்பாடல் வழியாகச் சாற்றும் வழிபாட்டினை ஏற்று அருள் புரியுமாறு விண்ணப்பம் செய்தல்!
சதகப்பாடல் வழியாகச் சாற்றும் வழிபாட்டினை ஏற்று அருள் புரியுமாறு விண்ணப்பம் செய்தல்!
ADDED :3798 days ago
நினதுதெரி சனமுறை யிலேன்அமல நீசொன்ன
நிகமாதி நூல்கள் உணரேன்
நீதியா கமபுரா ணத்தினுரை செவிகொளேன்
நீடுசரி யைமு தலதாம்
உனதுபணி விடைபூசை கனவிலும் நினைத்திடேன்
ஓங்குசப ரியைபு ரியுமவ்
உயரடிய ரோடிணங் கேன்நின் திருப்பதிகள்
உலவிலேன் நதிகள் மூழ்கேன்
வினைகெட விபூதிகண் மணிவடம் அணிந்திலேன்
விமலன்நா மத்தில் ஒன்றும்
வினைவிடப் பாவியேன் ஒருதவமும் இல்லாத
வீணனின் திருவ டிக்கே
தினையளவும் அன்பிலேன் எனினும்என் தமிழ்த்தொண்டு
திருவருள் எனக்கு தவுவாய்
சிவசிதம் பரவாச சிவகாசி யுமைநேச
செகதீ சநட ராசனே.