வாழ்த்து
ADDED :3850 days ago
பார்வாழி கோயில்மிக வாழிசிவ கங்கையாம்
பரமதடம் வாழி வாழி
பரமவை திகசைவ தருமையா தீனமிக
பருதிமதி யளவும் வாழி
கார்வாழி மாதமும் மாரிகள் பொழிந்துநீள்
காசினி தழைத்து வாழி
கருதரிய தெய்வமறை சைவமறை யந்தணர்கள்
கனவேள்வி யோங்க வாழி
நீர்வாழி அரசர்செங் கோல்வாழி தனதனென
நிதியோங்க வணிகர் வாழி
நீடுவே ளாளர்முத லானவா னாடர்களும்
நிமலனன்(பு) ஓங்க வாழி
சீர்வாழி அடியர்குலம் வாழிநாள் தொறுமிக்க
சிவஞானர் அருளும் வாழி
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.