உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டையில் பஜ்ரங்கி சேவாலய கரிகோல ஊர்வலம்!

மங்கலம்பேட்டையில் பஜ்ரங்கி சேவாலய கரிகோல ஊர்வலம்!

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டையில் 96 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை எழுப்பி,  கோவில் கட்ட உள்ளதையொட்டி, விநாயகர், ராமர்,  சீதை, லட்சுமணர் சுவாமி சிலைகள் கரி கோல ஊர்வலம் நடந்தது. மங்கலம்பேட்டை பஜனை மடத்தில், பஜ்ரங்கி சேவாலயம் சார்பில் 96 அடி உய ரத்தில் வெண்கலத்தில் ஆஞ்சநேயர் சிலை நிறுவி, கோவில் கட்டப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் மாமல்லபுரத்திலிருந்து விநாயகர்,  ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர்,  சிலைகள் கொண்டுவரப்பட்டு, மங்கலம்பேட்டையில் கரிகோல ஊர்வலம் நடந்தது. பஜனைமடத் தெருவில்  துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, கோவில் அமையும் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., செந்தில்  தலைமையில், டி.எஸ்.பி., பாண்டியன், இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !