உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: இறைவனின் கிருபை!

ரமலான் சிந்தனைகள்: இறைவனின் கிருபை!

“ரமலான் மாதத்தில் தொழுகையின் அளவு எந்தளவுக்கு மிகுகிறதோ, அந்தளவுக்கு அதிக பலனை அல்லாஹ் அருள்வான். “நீங்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்). நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒரு ஸஜதாவைக் கொண்டும் உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்துகிறான். உங்களை விட்டும் ஒரு பாவத்தை அழித்து விடுகிறான்,” என்கிறார் நபிகள் நாயகம். மனிதன் தொழுத பிறகு, அவனுக்காக தொழுகையின் பத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுகிறது. சிலருக்கு ஒன்பதில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு ஏழில் ஒரு பங்கு... இப்படியாக நாம் தொழும் தொழுகைக்கு ஆயிரத்தில் ஒரு பங்கென்ன! பல லட்சத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுமானால், அதுவும் அல்லாஹ்வின் கிருபையே ஆகும். கியாமநாளில் முதலாவதாகக் கேட்கப்படும் கேள்வி தொழுகையைப் பற்றியதாகும். அல்லாஹ் வானவர்களை நோக்கி,“ என்னுடைய அடியானின் தொழுகை குறைவாக உள்ளதா என்பதைக் கவனியுங்கள்,” என்று கட்டளையிடுவான். அது முழுமையாக இருந்தால் முழுமையென்று பதிவு செய்யப்படும். குறைவாக இருந்தால் குறைவென்று பதியப்படும். எனவே, நீங்கள் தொழுகையில் கவனம் செலுத்துங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !