உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் விழா ஜூலை 26 ல் கொடியேற்றம்!

துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் விழா ஜூலை 26 ல் கொடியேற்றம்!

துாத்துக்குடி :துாத்துக்குடியில் பனிமய மாதா சர்ச் திருவிழா ஜூலை 26ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மாதாவின் உருவ பவனி ஆக., 5 ம் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. துாத்துக்குடியில் உள்ள பனிமய மாதா சர்ச் திருவிழா ஆண்டு தோறும் ஆக., மாதம் நடக்கும். இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதுமுள்ள பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றம் ஜூலை 26 பிஷப் இவான்அம்புரோஸ் தலைமையில் காலை 7.30 மணிக்கு நடக்கிறது. திருவிழா நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு முதல் ஜெபமாலை, 5 க்கு முதல் திருப்பலி, 5,45 க்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12 மணிக்கு இரண்டாம் ஜெபமாலை, 3 க்கு மூன்றாம் ஜெபமாலை, மறையுரை அருளிக்க ஆசிர். இரவு 7.15 க்கு நான்காம் ஜெபமாலை நற்கருணை ஆசீர், ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஆக., 2 ல் புதுநன்மை, நற்கருணைப்பவனி நடக்கவுள்ளது. 5ல் மதுரை முன்னாள் பிஷப் பீட்டர் பெர்னாண்டோ, துாத்துக்குடி பிஷப் இவான் அம்புரோஸ், திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா ஆகியோர் பங்குபெறும் ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், காலை 7 மணிக்கு மாதாவின் உருவ பவனி நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை பாதிரியார் லெரின் டிரோஸ், உதவி பாதிரியார் சில்வெஸ்டர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !