ஆனைமலை பைரவர் கோவிலில் வழிபாடு!
ADDED :4101 days ago
ஆனைமலை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கோபால்சாமி மலை அடிவாரத்தில் உள்ள கால சம்ஹரா பைரவ மூர்த்திக்கு, சிறப்பு வழிபாடு நடந்தது. ஆனைமலை அருகேயுள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை அடிவாரத்தில் உள்ளது கால சம்ஹார மூர்த்தி பைரவர் கோவில். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது. பால், சந்தனம், இளநீர், திருமஞ்சனம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜையில், பக்தர்கள், வெண் பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர். ராகு கால சிறப்பு வழிபாட்டில், பெண்கள் எலுமிச்சை தீபமேற்றி வழிட்டனர். திரளாக பங்கேற்க பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.