உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமி அருள் பதிகம்

அபிராமி அருள் பதிகம்

1. கள்ளவாரணரே கரிமுகத்துக் கடவுளே உன்னையே
 உள்ளத்தில்வைத்து உயர்த்துகின்றேன் அன்னையைப்பாடிட
வெள்ளமென வார்த்தைகளைத் தந்திடுக முதற்கடவுளே
பிள்ளையாரே என்றும் உடனிருந்து காத்திடுக.

2. திருக்கடவூரின் தலைவியே சிவனின் மறுபாதியே
அருட்கடலே ஆனந்த வாழ்வுதரும் அன்னையே
உள்ளத்தில் இருப்பவளே உமையவளே உன்னையே
கள்ளமில்லாமல் வணங்கிட உன்னருளைத் தந்துவிடு.
 
3. கங்கையைச் சூடியவனின் இடப்பாகம் அமர்ந்த
மங்கையே மாணிக்கமே மாதுளம்பூவே அன்று
திங்களைக் காட்டிப் பட்டரைக் காத்தவளே
எங்களைக் காத்திட உன்னருளைத் தந்துவிடு.

4. தூண்டும் சுடர்போல என்வாழ்வில் வந்தவளே
தாண்டும் மனதை ஒருநிலைப் படுத்திவிடு
வேண்டும் வரமெனக்குத் தந்தவளே உன்னை
மீண்டும் புகழ்வதற்கு உன்னருளைத் தந்துவிடு.  

5. செய்தபாவம் தன்னைச் செயலிழக்கச் செய்திடுவாய்
உய்யவழி ஒன்று சொல்லிடுவாய் உலகநாயகியே
மெய்யே பேசவேண்டும் மென்மேலும் உயரவேண்டும்.
அய்யன் துணையுடன் உன்னருளைத் தந்துவிடு.

6. மறவாத மனமெனக்கு மனதாரத் தந்திடுவாய்
உறவாலே வாழ்வில் உயர்ந்திடச் செய்திடுவாய்
பிறவாத வரங்களைத் தாயே நீ வழங்கிடுவாய்
இறவாத புகழ்பாட உன்னருளைத்    தந்துவிடு.   

7. பன்னிரு மாதமும் உன்கோயிலில்ச தாபிஷேகம்
எண்ணிலா மணிவிழா ஏற்றமுடன் நடைபெறும்
கண்களை மூடினால்உ ன்திருமுகம் வந்துவிடும்
உன்மகனைக் காத்திட உன்னருளைத் தந்துவிடு.     

8. திருவருள் புரிகின்றதி ருக்கடையூர் அபிராமி
அருள்மிகு அமுதீசர் அருட்பாகம் அமர்ந்தவளே
பொருள்மிகு கவிதையும் போதிய ஞானமும் தர
இருகரம் கூப்பினேன் உன்னருளைத் தந்துவிடு.    

9. அமாவாசையை பவுர்ணமி  ஆக்கியவளேஅபிராமியே
அம்மாஎன் ஆசையை  அடக்கிட வழிகாட்டு
சும்மாஉன் கோயிலைச்   சுற்றிச்சுற்றி வந்தேன்
அம்மா என்றழைத்தேன் உன்னருளைத் தந்துவிடு

10. சங்கு சக்கரம் தாங்கியவனின் தங்கையே
பொங்கிடும் பக்தியில் உன்புகழ் பாடுகிறேன்
அங்கயற் கண்ணியே அகிலத்தைக் காத்திட
மங்கையற் திலகமே உன்னருளைத் தந்துவிடு.

11. அண்டமெல்லாம் காப்பவளே ஆத்தாளே அபிராமியே
விண்ணவரின் துயர்களைய அமுதத்தைத் தந்தவளே
விண்ணதிர உன்புகழைப் பல்லாண்டு பாடிவர
கண்ணன் எனக்கு உன்னருளைத் தந்துவிடு 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !