முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம் 17ம் தேதி நடக்கிறது!
ADDED :3857 days ago
கடலூர்: முத்தியால்பேட்டை முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம் வரும் 17ம் தேதி நடக்கிறது. குறிஞ்சிப்பாடி வட்டம், அனுக்கம்பட்டு கிராமம் முத்தியால்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 9ம் தேதி காலை விநாயகர் பூஜை, சாகை வார்த்தல் இரவு கொடியே ற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் அபிஷேக ஆராதனையும், சகஸ்ரநாம அர்ச்சனையும், வீதியுலாவும் நடந்து வருகிறது. வரும் 17ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. 18ம் தேதி முத்தாலம்மன் தெப்ப உற்சவம், மஞ்சள் நீர் அவரோகணம், இரவு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை அனுக்கம்பட்டு, முத்தியால்பேட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.