கணபதி கோவில் ஆண்டு விழா
ADDED :3774 days ago
கோவை : விளாங்குறிச்சியில் உள்ள வித்யா கணபதி கaோவிலின் 25ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.கோவை ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் சார்பில், நடத்தப்படும் தர்மசாஸ்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வித்யா கணபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின், 25ம் ஆண்டு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவை ஐயப்ப சேவா சங்கத் தலைவர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைவர் விஜயராகவன், டாக்டர் விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.