சிவன் கோயில் ஆக்கிரமிப்பு மாநகராட்சியினர் அகற்றம்
ADDED :3774 days ago
திருநெல்வேலி :நெல்லையில் சிவன் கோயில் தெப்பக்குளத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்றினர்.திருநெல்வேலி, திரிபுராந்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்து அமைப்புகளும் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர். கட்டப்பட்டு தற்போது யாரும் வசிக்காமல் இருந்த ஏழு வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். மார்க்கெட் ரோட்டிலும் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.