இதிகாசங்களில் நல்ல படிப்பினை வழங்கும் கதை எது?
ADDED :3914 days ago
இதிகாசம் என்பதற்கு இது இப்படியாக நடந்தது என்று பொருள். இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே வாழ்வியல் உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. பெண்ணாசை, மண்ணாசை கொண்டவர்கள் எத்தனை பலம் பெற்றவர்களாக இருந்தாலும், இறுதியில் தர்மத்தால் அழிக்கப்படுவார்கள் என்பதே இதன் அடிப்படை. கண்களில் சிறந்தது வலக்கண்ணா, இடக்கண்ணா என்றால் இரண்டு கண்ணும் தான் என்பதே சரியான பதிலாக இருக்கும்.